நியாயமற்ற விதத்தில் சமுர்த்தி நிவாரணங்களை இழந்த இரண்டு இலட்சம் பேருக்கு இவ்வாண்டு முடிவுக்குள் மீண்டும் நிவாரணம்.

Share Button

நியாயமற்ற காரணங்களின் அடிப்படையில் சமுர்த்தி நிவாரணங்களை இழந்த இரண்டு இலட்சம் பேருக்கு இவ்வாண்டுக்குள் சமுத்தி நிவாரணம் வழங்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவெல தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், மக்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும் பாடுபட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. சர்வதேச அளவில் இலங்கைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. எனினும் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லையென அலவத்துவெல தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *