இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்;கெட் போட்டி இன்று.

Share Button

சுற்றுலா மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி இன்று கேப் டவுணில் இடம்பெறவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.

அதன்படி, இன்றைய போட்டி தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைகின்றமை குறிப்பிடத்தககது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11