கீத் நோயர் கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பெற சிஐடி தயார்

Share Button

ஊடகவியலாளர் கீத் நோயரை கடத்திச் சென்று சித்திரவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை முற்பல் 10மணிக்கு கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அவரது வாக்கு மூலம் பெறப்படும். இதற்கான அறிவித்தல் கடிதம் கடந்த திங்கட்கிழமை திரு.மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய அம்பலப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியை விசாரிப்பதாக சிஐடியினர் அறிவித்துள்ளனர். கீத் நோயர் கடத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் தாமே முதன் முதலில் தகவல் அறிந்ததாகவும், அது பற்றி தாம் அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்ததாகவம் சபாநாயகர் சி;ஐடி யினரிடம் அறிவித்திருந்தார்.

முன்னைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள், படுகொலைகள் முதலான சம்பவங்கள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறியவே நிகழ்ந்தனவா என்ற சந்தேகம் கீத் நோயர் தொடர்பான விசாரணையில் மீண்டும் உறுதியாவதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சந்திரசிறி தொடவத்த தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11