போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share Button

சட்டத்திற்கு முரணான வகையில், போதைப் பொருள்களை நாட்டிற்குள் கொண்டுவதை தடுப்பதற்காக சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸாருக்கு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும். போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக சோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் விசேட பணிக்குழுவினருடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தில் 320 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையில் கமல் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தான் பூரண ஒத்ழைப்பை வழங்குவதாக இதன் போது கருத்து வெளியிட்ட பதில் பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், இலங்கை இராணுவப் படையின் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரில் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். வட மாகாணத்தில் நேற்று கைப்பற்றப்பட்ட 320 கிலோ கிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட, 383 கிலோ கேரள கஞ்சா கடந்த இரண்டு மாதங்கில் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த வருடம் 1.4 தொன்னுக்கும் அதிகமான கோரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11