வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என பல பேரூந்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Share Button

தனியார் பஸ் ஊழியர்கள் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என பல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்;சங்க அமைப்புக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டாதென அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஜி.சி.ஈ.உயர்தர பரீட்சையைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தை எட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

எவரேனும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறாவிட்டால், அபராத தொகையை அதிகரிப்பதில் பிரச்சினை எழப் போவதில்லையென கொழும்பு பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் விமுக்தி துஷ்யந்த தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ராஜா உஸ்ஸெட்டகெய்யாவ கருத்து வெளியிடுகையில், இந்த வேலை நிறுத்தமானது வீதி விபத்துக்களை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்கு சமமானதென தெரிவித்தார்.

ஜி.சி.ஈ உயர்தர பரீட்சை உள்ளிட்ட பிரதான பரீட்சைகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை கஷ்டத்திற்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை தடுப்பதற்கு தேசிய கொள்கை அவசியமென ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுமானால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறதென பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11