பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

Share Button

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது சின்னத்தை மாற்றுவது பற்றிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி இன்றுடன் முடிவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பில் பல கட்சிகள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ஹேரத் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட 64 அரசியல் கட்சிகளில் 12 கட்சிகள் மாத்திரம் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் ஏழு பில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்கில்; விசேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11