தமக்கு எதிரான பிடியாணையை ரத்து செய்யுமாறு கோரி, ரவி கருணாநாயக்க ரீட் மனுவை தாக்கல் செய்துள்ளார்

Share Button

தன்னை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, ரவி கருணாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.

குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என ரவி கருணாநாயக்க தனது ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிவுறுத்தலையும் இரத்து செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11