‘கொரோனா வைரஸ்’ தீவிரமாகப் பரவுவதை அடுத்து, மேலும் பல சர்வதேச போட்டிகள் இடைநிறுத்தம்.

Share Button

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை அடுத்து, மேலும் பல சர்வதேச போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் சகல கால்பந்தாட்டப் போட்டிகளும் அடுத்த மாதம் 30ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இங்கிலாந்து பிரிமியர் லீக், மகளிர் சுப்பர் லீக் போன்றவையும், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த சுற்றுத்தொடர்களும் அடங்கும். உலகம் முழுவதிலும், தொழில்முறை சார் சர்வதேச ரெனிஸ் போட்டிகள் ஜுன் 7ம் திகதி வரை இடம்பெற மாட்டா. உலகப் புகழ்பெற்ற மொனாகோ க்ரோன்-ப்ரி மோட்டார் வாகன ஓட்டப் பந்தயமும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஐபிஎல் போட்டிகளை இரத்துச் செய்வது நல்லதென இந்திய அரசாங்கம் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை இரசிகர்கள் இல்லாத நிலையில் நடத்துவதற்குத் தயாரென ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா வைரஸின் வியாபகம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இங்கிலாந்து சுற்றுத்தொடரையும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சுற்றுத்தொடரின் முதல் போட்டி ஜுன் 4ம் திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாவதாக இருந்தது. இதனை கரீபியன் தீவுகளுக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. இது சாத்தியமான மாற்றுத் தீர்வாக அமைய மாட்டாதென மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *