வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

Share Button

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கொரோனா தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேசந்திர சில்வா கருத்து வெளியிடுகையில், இந்தியாவில் யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் ஆயிரத்து 500 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டுள்ளன. சுயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இவர்களுக்கு அறிவுறத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11