எதிர்வரும் சில தினங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருந்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவதளபதி கோரிக்கை விடுத்துள்ளார்

Share Button

கொறோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகப் படையணி பொதுமக்களின் நலனுக்காக நேற்றை தினம் கூடி பல தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெ தெரிவித்துள்ளார். சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்கள் தற்சமயம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அரசாங்க திணைக்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.

சுபாரதி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் சில தினங்களுக்கு மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து கொறோனா தொற்று ஒழிப்புக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *