கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

Share Button

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 64 ஆயிரத்து 192ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்து 888 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவிவருவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எச்சரித்துள்ளார். பொரிஸ் ஜோன்ஸனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதன் அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் விதிமுறைகள் மற்றும் சுகாதார தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *