20 லட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி
10 லட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் பங்குகொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
20 லட்சம் சமூர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.