மார்ச் 16ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு

Share Button

மார்ச் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அவ்வாறானவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 1933 அல்லது 119 என்ற இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அழைத்து தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கொழும்பு நகரை மையப்படுத்தி இன்றிலிருந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். கொழும்பு நகரத்திற்கு உள் நுழையும் 16 இடங்களை உள்ளடக்கிய வகையில் விசேட வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11