மாகாண சபை தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

Share Button

மாகாண சபை தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இந்த விவாதம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. விருப்பு வாக்களிப்பு முறையை ஒழித்து, நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டதாக விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கட்சிகளின் நன்மைகளை கருதாது, பொதுமக்களின் நன்மைகருதி, தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு இணங்கவே, ரயில் கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 2008ஆம் ஆண்டிலேயே இறுதியாக ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டன. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை பஸ் கட்டணங்கள் பல சந்தர்ப்பங்களில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *