உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்

Share Button

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் கிறிஸ்து நாதர் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இலங்கையில் ஆலயங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பேராயர் இல்ல ஆலயத்திலிருந்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

இன்று காலை மக்கள் தொலைக்காட்சி ஊடாக இந்த திருப்பலியில் பங்கேற்க முடியுமென பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் வேளையில் உலகில் அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து மக்கள் தமது பக்தி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கிணங்க வத்திக்கானிலிருந்து பரிசுத்த பாப்பரசர் ஈஸ்டர் பண்டிகை சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் காலை 8.45க்கு கொச்சிக்கடை மற்றும் கட்டுவாபிட்டிய தேவாலயங்களில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இது இலங்கை வரலாற்றில் கறைபடிந்த நாளாக கருதப்படுகிறது. இந்தத் தொடர் தாக்குதல் பிற்பகல் 2.25 வரை இடம்பெற்றது. மூன்று தேவாலயங்கள், ஹொட்டல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 277 பேர் உயிரிழந்தார்கள். தாக்குதலில் எட்டு தற்கொலைதாரிகள் உயிரிழந்தனர். சம்பவத்தில் 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *