ஒன்பது லட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அரசாங்கத்தால் கொள்வனவு

Share Button

ஜனாதிபதி செயலணியின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தின் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் மூலம், 9 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய திட்டங்களுக்கு அமைவாக நாட்டின் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய மரக்கறி மற்றும் பழங்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமையில், தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டும், தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் உயிர்த்த ஞாயிறு காலப்பகுதியில் நுகர்வோருக்கு மரக்கறி மற்றும் பழங்களை வழங்குவது இதன் நோக்கமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11