இந்தியாவின் முடக்கநிலை மே மாதம் 3ஆம் திகதி வரை நீடிப்பு

Share Button

இந்தியாவின் தற்போதுள்ள முடக்க நிலை மே மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதுமான 21 நாட்கள் முடக்கநிலை பிரகடனப்பட்டிருந்தது. இந்த முடக்கல் நிலை இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸூ பரவலை தடுப்பதற்கு எதிராக போராடும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தனது உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்தடன், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளில் முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு போக்குவரத்து செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியாயோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தையும் தாண்டியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகிறது. உற்பத்தி, வர்த்தக, நிர்மாண நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதியும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11