கொரோனா நிவாரண நிதிக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர் தனது துடுப்பு மட்டையை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளார்.

Share Button

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீர் முஷ்பிகுர் ரஹீம் தனது துடுப்பு மட்டையை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் கிடைக்கும் நிதியை கோவிட் -19 நிவாரண பணிகளுக்காக வழங்கவுள்ளார்.

2013ஆம் ஆண்டில் காலியில் நடந்த இலங்கைக்கு எதிராக போட்டியில் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்த துடுப்பு மட்டையையே அவர் இவ்வாறு ஏலத்தில் விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை சதம் அடித்த தமது துடுப்பு மட்டையை இணைய தளத்தில் ஏலத்தில் விடுவதாகவும் இதன் மூலம் பெறப்படும் நிதி முழுவதும் ஏழை மக்களுக்கே வழங்கப்படும் எனவும் முஷ்பிகுர் ரஹீம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த மட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்ய இந்த மட்டையில் விலையை உயர்த்தும் திறன்கொண்ட அனைவரும் அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் முஷ்பிகுர் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11