என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – 2018 கண்காட்சி இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது

Share Button

நல்லிணக்கம், ஜனநாயகம், அபிவிருத்தி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமாகிறது.

இன்று முற்பகல் 10 மணிக்கு மக்கள் பார்வைக்காக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டாலும், இன்று பிற்பகல் 4 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண வைபவம் இடம்பெறவிருக்கிறது. இது 12 வலயங்களை உள்ளடக்கியதாகும். அரச – தனியார் துறைகளைச் சேர்ந்த 12 காட்சிக் கூடங்களும் இதில் அடங்கும்.

25 ஆயிரம் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் இதற்கமைவாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நிறைவேற்றிய பணிகள் பற்றியும், 2025ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கத்தின் இலக்குகளுடன் கூடிய பணிகள் தொடர்பாகவும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்படவிருக்கிறது. தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதும் இதன் பிரதான நோக்கமாகும். கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11