இங்கிலாந்திலிருந்து ஒரு தொகை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

Share Button

லண்டனில் நிர்கதியாகியிருந்த 208 இலங்கை மாணவர்கள் இன்று அதிகாலை 3.30 அளவில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். இலங்கை வந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லண்டனில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக மற்றுமொரு விமானம் அங்கு சென்றுள்ளது. விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் லண்டன் நோக்கி பயணித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யா உள்ளிட்ட ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11