நெல் சந்தைப்படுத்தும் சபை விவசாயி ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரித்துள்ளது

Share Button

நெல் சந்தைப்படுத்தும் சபை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவை தற்போது ஆரம்பித்துள்ளது. சிறுபோக நெல் கொள்வனவிற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இது வரையில் நெல் சந்தைப்படுத்தும் சபை ஒரு விவசாயியிடமிருந்து இரண்டாயிரம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்துள்ளது.

இதனை ஆயிரம் கிலோகிராமினால் அதிகரித்து, ஒரு விவசாயியிடமிருந்து மூவாயிரம் கிலோகிராமை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பலந்தோட்டையில் இன்று காலை நெல் கொள்வனவு சபைக்கு உட்பட்ட களஞ்சியசாலையை அமைச்சர் பார்வையிட்டார். இதன் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் சட்டத்தரணி உபாலி மோட்டியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

நெல் சந்தைப்படுத்தும் சபை ஒரு கிலோ சம்பா நெல்லை 41 ரூபாவிற்கும், நாட்டரிசி நெல் ஒரு கிலோவை 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2