கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரை விட கூடுதலானவர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்

Share Button

இலங்கையில், கொவிட்-19 தொற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் நோயாளிகளை விடவும் கூடுதலானவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று முற்பகல் விடுத்த அறிக்கையின் பிரகாரம், 477 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 439 ஆகும்.

இன்று முற்பகல் மேலும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கடந்த இரண்டு நாட்களில் முற்றாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 95 வரை அதிகரித்துள்ளது. கடற்படை வீரர்கள் 151 பேரும் குணமடைந்துள்ளார்கள். புனானையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 98 பேரும் இன்று வீடு திரும்பினார்கள். இவர்களுக்கு தொற்று இல்லை என்பது Pஊசு பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொழும்பு கோட்டை பிரதான பஸ் நிலையத்தைச் சேர்ந்த சாரதிகளும், நடத்துனர்களும், மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் Pஊசு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபை அறிவித்தள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11