முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, அனுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி டளஸ் விக்கிரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *