சமகால அரசாங்கம் எந்த விதத்திலும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் தொடுக்கவில்லை எனபிரதமர் தெரிவிப்பு

Share Button

சமகால அரசாங்கம் எந்த விதத்திலும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் தொடுக்கவில்லை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சில நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கூடுதல் கால அவகாசம் எடுக்க நேர்ந்தாலும், சகலருக்கும் சமநீதி உறுதி செய்யப்படும். மேல் மாகாணத்தில் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னொரு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதம மந்திரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பிரதமர் பதிலளித்தார். மத்திய வங்கி பிணை முறி விவகாரம் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பி உறுப்பினர் விஜித்த ஹேரத் அரசியல் யாப்பின் மீதான திருத்த பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என திரு.ஹேரத் குறிப்பிட்டார்.

தபாலக கட்டளை சட்டத்தின் கீழான பிரமாணங்களும் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கபீர் ஹசிம் தபால் சேவையை சீர்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தபால் திணைக்களத்தில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *