ஊழலும் மோசடியும் இல்லாத தூய்மையான அரச நிர்வாகத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தால் முடிந்ததாக ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

ஊழலும் மோசடியும் இல்லாத தூய்மையான அரச நிர்வாகத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தால் முடிந்தது என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல், மோசடி, முறைகேடுகளுக்கு எதிராக மேற்கொள்ள முடியாமல் போன நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார். கோப் குழுவின் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக வலுப்படுத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை திருத்தியமைத்தமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. கணக்காய்வு ஆணைக்குழுவை அமைக்க முடிந்தமை பெரும் வெற்றியாகும். அரை நூற்றாண்டு காலம் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கணக்காய்வு சேவைகளை ஸ்தாபிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மோசடி முறைகேடுகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதில் நிலவும் தாமதம் பற்றி மக்கள் மத்தியில் விமர்சனங்கள் உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றி குற்றமிழைத்தோருக்கு விரைவில் தண்டனை வழங்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் நிகழ்ந்த பாரதூரமான ஊழில் மோசடிகள் பற்றி விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு எதிராக துரித தண்டனை வழங்கப்படும். இதில் பொதுச் சொத்துக்களையும், அரச பணத்தையும் துஷ்பிரயோகம் செய்த நபர்களுக்கு எதிரான மரண தண்டனையும் உள்ளடங்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *