ஐக்கிய தேசிய கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடப்படுகிறது.

Share Button

ஐக்கிய தேசிய கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடப்படுகிறது.

சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் நடத்தப்பட்ட முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் ஆறாம் திகதி கொழும்பு கில்பிரட் சுற்றுவட்டத்திலுள்ள பாம்போர்ட் மாளிகையில் அதன் முதற்கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவிக்கு தேசபிதா டீ.எஸ்.சேனாநாயக்கவின் பெயரை அமரர் ளுறுசுனு பண்டாரநாயக்க முன்மொழிந்தார்.

இதன்போது, கட்சியின் யாப்பை உருவாக்கும் பொறுப்பு அமரர் பண்டாரநாயக்க, சேர் பிரான்சிஸ் மொலமுரே ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூத்த அரசியல்வாதி எஸ்.நடேசன் ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரை முன்மொழிந்தார். சேர் ஜோன் கொத்தலாவல, ளுறுசுனு பண்டாரநாயக்க, ஜோர்ஜ் ஈ சில்வா, ரி.வி.ஜாயா, ஏ.மகாதேவா ஆகியோர் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராக ர்று அமரசூரிய நியமிக்கப்பட்டார். ஏ.ஆர்.ஏ.ராய், ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோர் இணை பொருளாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த தலைமையகத்தில் நாளை இடம்பெறும். இந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள தேசிய அலைவரிசை ஊடாக முற்பகல் பத்து மணி தொடக்கம் நேரலையாக ஒலிபரப்பப்படவுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் பற்றி விபரித்தார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, ஊடகவியலாளர்களையும், இளைஞர்களையும் படுகொலை செய்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து சிலர் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற முனைவதாக அவர் சாடினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *