சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், புகழ்பெற்ற கலைஞருமான் சி.நடராஜசிவம் மறைவு

Share Button

சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், புகழ்பெற்ற கலைஞருமான அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் காலமானார்.

ஒரு வாரகாலம் சுகவீனமுற்றிருந்த அவர் மாரடைப்பு காரணமாக 74 வயதில் நேற்றிரவு காலமானதாக குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.

அமரர் நடராஜசிவத்தின் பூதவுடல் இன்று காலை பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 12 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்படும். தகனக் கிரியைகள் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறும்.

அமரர் நடராஜசிவம் 1967ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை வானொலியில் இணைந்தார். தமது ஐம்பதாண்டு கால ஊடக வாழ்க்கையில், ஒரு சிரேஷ்ட அறிவிப்பாளராக, வானொலி – தொலைக்காட்சி – திரைப்பட நடிகராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, பயிற்றுவிப்பாளராக அவர் முத்திரை பதித்தவர்;. சிங்கள தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற கலைஞராக அமரர் நடராஜசிவம் காணப்பட்டார். அவர் தனியார் வானொலி நிறுவனமொன்றின் முகாமையாளராகவும் நிகழ்;ச்சி ஆலோசகராகவும் கடமையாற்றி புகழ் பெற்றிருந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11