பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

Share Button

பகிடிவதையை தடுப்பது தொடர்பான சட்;டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழத்திற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தும் பகிடிவதைக்கு அஞ்சி கடந்த காலங்களில் ஆயிரத்து 500க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கடந்த 25 வருடங்களில் பகிடி வதை காரணமாக 25 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியிலும் அதிகளவிலான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். சிறு குழுவினரின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளினால், பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலத்தை அழிவு;க்குள்ளாக்க முடியாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகத்தின் கல்வியின் தரத்தை பாதுகாக்க தேவையான விசேட வேலைத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11