உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் இல்லை என்று ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

விரைவாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று சிலர் தெரிவித்த போதிலும், குறுப்பிட்ட காலத்திற்கு முன்னர்  ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அது தொடர்பான தீர்மானத்தை தம்மால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

நிவித்திகல பொதுமக்கள் சந்தை பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிவித்திகல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். பொதுமக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி அரசியல் ரீதியில் மிகுந்த மதிப்பீட்டை கொண்டிருக்குமாயின் அவர்கள் தவறு இழைக்கும் இடம் இதுவாக இருக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

 

தாம் தொடர்பில் எத்தகைய மதிப்பீடுகளை மேற்கொண்ட போதிலும் இவர்கள்; எவராலும் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இன்றி தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நபர்களிலும் பார்க்க கட்டியெழுப்பப்படும் அரசியல் நடவடிக்கைகள் தற்காலிகமானதாகும.; நாட்டுக்கு தேவை இலக்குகள் மற்றும் தூர நோக்குடான அரசியல் நடைமுறையாகும். தாய்நாடு தொடர்பில் சிந்தனைகளையும் இலக்குகளையும் கொண்ட கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். இதனை வலுவூட்டி தற்போது வெற்றிகரமான பயணத்தில் இக்கட்சி முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

ஐக்கிய தேசிய கட்சியுடன்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்திருப்பதே தற்போ கட்சிக்குள்ள முக்கிய குற்றச்சாட்டாகும். கடந்த அரசாங்கத்தில் செய்யக் கூடாதவை மேற்கொள்ளப்பட்டமையினால் இதனை மேற்கொள்ள வேண்டி இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

நாடு இழந்துள்ள சர்வதேச ஒத்துழைப்பை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப் பெற்றுக்கொள்வதற்கும் தற்பொழுது முடிந்து இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எதிர்வரும் 24ம் திகதி தாம் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பில் தாம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிய அறிவிப்பு ஒன்றை விடுவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாடு எதிர்கொண்டுள்ள  பல்வேறு சவால்களுக்கு இதன்மூலம் தீர்வு கிட்டும்.

 

இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கி பிரதேசத்தில் கங்கை மற்றும் கால்வாய்களை பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வுக்கு அடுத்த வாரத்திலிருந்து அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு பொலிஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேம்பாட்டுக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்பை மேற்கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆயிரம் பேர் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

 

நிவித்திகலயில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் ஜனாதிபதி தலைமையில் திறக்கப்பட்டது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *