அரசாங்கத்தின் உறுதியான தீர்மானங்களினால் சர்வதேச மட்டத்திலான 90 சதவீதத்திற்கும் அதிகமான அழுத்தங்களை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

Share Button

சட்டத்தின் ஊடாக அனைவரது மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணர்வதன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அரசாங்கத்தின் உறுதியான தீர்மானங்களினால் இலங்கையின் மீது சர்வதேச மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் மேலான அழுத்தங்கள் தற்சமயம் குறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் சுதர்ஷன குணவர்தன கருத்து வெளியிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்க முயன்று வருகின்றன. இது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சியாகும் என்று அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *