புளோரன்ஸ் புயல் காரணமாக பெருமளவானோர் பலியாகலாமென அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை.

Share Button

அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தை நெருங்கும் ஹரிக்கேன் புளோரன்ஸ் என்ற புயல் காரணமாக பெருமளவு மக்கள் பலியாகலாமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தப் புயல் காரணமாக கடல் பெருக்கெடுத்து தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென அமெரிக்காவின் இடர்காப்பு முகாமைத்துவ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் வட கரோலினா, தென் கரோலினா, வேர்ஜீனியா மாநிலங்களில் இருந்து வெளியேறுமாறு 17 இலட்சம் பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் தாக்குவதற்கு முன்னர் வட கரோலினா மாநிலத்தில் கரையோரத்தில் கடும் காற்று வீசுவதுடன் அடைமழை பெய்கிறது. பல இடங்களில் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *