கம்போடியாவில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன்வருமாறு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு.

Share Button

கம்போடியாவில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன்வருமாறு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு.

கம்போடியாவில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்வருமாறு கம்போடியப் பிரதமர் ஹூன் சென் இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்க தமது அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் கம்போடிய பிரதமர் கூறினார். ஆசியான் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் ஹனோய் நகரில் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

பரஸ்பர முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது பற்றியும் இருவரும் கவனம் செலுத்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான சமய கலாசார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இருதரப்பு வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் சந்திப்பை விரைவாக நடத்துவது பற்றியும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-07 | 11:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 180
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 136
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 257
நோயிலிருந்து தேறியோர் - 38
இறப்புக்கள் - 6