பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மீதான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

Share Button

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி ஆறு கோடி 40 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய சம்பவம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது. மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியை கொள்வனவு செய்ததன் பின்னர் அதில் குடியிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிலிருந்து அகற்றுவதற்காக இந்த இலஞ்சத் தொகையை அவர்கள் கோரியிருந்தார்கள். இதற்கமைய சட்டமா அதிபர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக 15 குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11