டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி.

Share Button

உள்நாட்டு மேசைப்பந்து வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்க இலங்கை மேசைப்பந்து விளையாட்டு சங்கம் தயாராகி வருகிறது. இதன்படி, சீனா மற்றும் தென்கொரிய நாடுகளில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உலகில் தரம் வாய்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்கள் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பதால், அங்கு பயிற்சி பெறுவதன் மூலம் இலங்கைக்கு பலன் கிடைக்கும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சார்க் விளையாட்டுப் போட்டியில் கூடுதலான தங்கப் பதக்கங்களை வெல்வது இலங்கையின் நோக்கமாகும்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் ஆசிய போட்டி தாய்லாந்திலும், தெற்காசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டி பங்களாதேஷிலும், தெற்காசிய சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானிலும் இடம்பெறவுள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் இலங்கை பங்கேற்கவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *