இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் கடும் வெள்ளம்.

Share Button

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். நேற்று மாலை வரை எட்டு பேர் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அரசாங்கம் ஆயிரத்து 126 நலன்புரி மத்திய நிலையங்களை திறந்துள்ளது. பல மாவட்டங்களில் பாலங்கள் சேதமடைந்திருப்பதால், அப்பகுதிகளில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதும் சிரமமாக அமைந்துள்ளது. நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 593 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம் இந்தியாவின் ஒரு பகுதியிலும், நேபாளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய வனத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் எட்டு காண்டாமிருகங்களும் உள்ளடங்குகின்றனர். அஸாம் மாநிலத்தின் கஸிரங்கா வனத்தின் 85 சதவீதம் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வனத்தில் சுமார் இரண்டாயிரத்து 400 காண்டாமிருகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11