கதிர்காம திருத்தல ஆடிவேல் மகோற்சவத்தின் இரண்டாவது வீதி உலா இன்று இடம்பெறும்.

Share Button

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம திருத்தல ஆடிவேல் விழாவின் இரண்டாவது வீதி உலா இன்று இடம்பெறுகிறது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இம்முறை வீதி உலாவில் பங்கேற்கும் வாய்ப்பு அடியார்களுக்கு கிடைக்காமல் போயுள்ளது. அடியார்கள் தத்தமது வீடுகளிலிருந்து கதிர்காம கந்தனுக்காக விளக்கேற்றி, வழிபாடு செய்யலாம் என கதிர்காமத் திருத்தலத்திற்கு பொறுப்பான பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எமது நிலையத்திடம் விளக்கினார்.

கதிர்காம திருத்தல ஆடிவேல் விழாவிற்குரிய வீதி உலா தொடர்பான நேரடி அஞ்சலை தேசிய வானொலியின் தென்னிலங்கை பிராந்திய ஒலிபரப்பு நிலையம் வழங்குகிறது. தேசிய அலைவரிசைகளிலும் நேர்முக வர்ணனைகள் இடம்பெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11