ஆப்கான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென தலிபான் அமைப்பு அறிவிப்பு

Share Button

ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து ஆப்கான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தயார் என தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், கைதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கை நிறைவு பெற்றால் தாம் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இவ்விரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. எனினும், அதிகரித்து வரும் வன்முறை இதற்கு தடங்கலை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தலிபான் அமைப்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ஆப்கான் அரசாங்கம் இது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11