சீனாவில் உள்ள அமெரிக்க கன்ஸியூலர் தூதரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை

Share Button

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க கன்ஸியூலர் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வலுத்துவரும் முரண்பாட்டை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார ஆரம்பப் பகுதியில் ஹோஸ்ட்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புலமைச் சொத்தை சீனா திருடுவதால், அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *