இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ரெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி சவாலான நிலையை எதிர்கொள்கிறது.

Share Button

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கடும் சவாலை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மெஞ்சஸ்டரில் நடைபெறுகிறது. நேற்று மூன்றாவது நாளாகும். நேற்றைய ஆட்ட முடிவில் இரண்டாவது இனிங்சில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மேற்கிந்திய வீரர்கள் இரண்டு விக்கட் இழப்பிற்கு பத்து ஓட்டங்களை எடுத்திருந்தார்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமாயின், அவர்கள் 389 ஓட்டங்களை எடுப்பது அவசியம்.

இங்கிலாந்து முதல் இனிங்சில் 369 ஓட்டங்களை எடுத்தது. இரண்டாவது இனிங்சில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 226 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மேற்கிந்திய அணி முதல் இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11