ஒஸ்கார் விருது வென்றதாலேயே ஹிந்தித் திரையுலகில் ஏ.ஆர் ரஹ்மான் சங்கடங்களை எதிர்கொள்வதாக இயக்குனர் சேகர் கபூர் கூறியுள்ளார்.

Share Button

ஒஸ்கார் விருதை வென்றதாலேயே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிந்தித் திரையுலகில் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதென பிரபல இயக்குனர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார். பொலிவூட்டைப் பொறுத்தவரையில், ஒஸ்கார் விருது பெறுவது மரணத்தை முத்தமிடுவது போலாகும். ரஹ்மானின் திறமைகளை ஹிந்தித் திரையுலகம் சகித்துக் கொள்ள மாட்டாதென சேகர் கபூர் தெரிவித்தார். நேற்று ரஹ்மான் வெளியிட்ட ஆதங்கம் தொடர்பில் அவர் ட்விற்றரில் பதில் அளித்தார். ஒரு கும்பல் தம்மை பொலிவூட்டில் வேலை செய்ய விடாமல் தடுக்கிறதென ரஹ்மான் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *