மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டின் நீதிமன்றத் தீர்ப்பு இன்று

Share Button

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழலில் ஈடுபட்டாரா? இல்லையா? என்பது பற்றிய தீர்ப்பை மலேசிய நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது. 16 மாதங்களின் பின்னர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அரச நிதியிலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை திருடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு பாரிய அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் குற்றமிழைத்ததாக அறிவிக்கப்பட்டால் பல தசாப்த சிறைத்தண்டனையை இவர் எதிர்கொள்ள நேரிடும். அதேபோல், குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதலாவது மலேசியப் பிரதமர் என்ற பெயரையும் இவர் பெற்றுக்கொள்ள நேரிடும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11