கடல் கொந்தழிப்புக் காணப்படும் ,டங்களுக்கு ,ன்று பகல் 12.00 மணி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Share Button

நாட்டில் நிலவும் தாழமுக்கத்தினால் தென் மேற்கு பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்கரமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யலாம். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. இதேவேளை, புத்தளத்தில் இருந்து சிலாபம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இன்று பகல் 12 மணி வரை இந்தப் பிரதேசங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வளிமண்வியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை நிலையம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11