நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்

Share Button

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அந்தக் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முறையான வேலைத்திட்டம் தமது கட்சியிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டைக் கட்டியெழுப்பும் வல்லமையுள்ள ஒரே கட்சி தமது கட்சி என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11