அடக்கு முறை ஆட்சி இடம்பெற்ற பிரேமதாச யுகத்திற்கு மீண்டும் இடம் தரப்பட மாட்டாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Share Button

அடக்குமுறை ஆட்சி இடம்பெற்ற பிரேமதாச யுகம் மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் முதல் கொண்டு கொலை செய்யப்பட்ட அந்த பயங்கர யுகம் தொடர்பில் அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிட்டார். எம்பிலிப்பிட்டியிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

நாட்டில் அதிக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாகாணவர்கள் கொலை செய்யப்பட்டது 1988 மற்றும் 1989ம் ஆண்டு காலப்பகுதியிலேயே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறு நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 3,400ற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். 1989ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி எம்பிலிப்பிட்டியவில் 13 பாடசாலைகளைச் சேர்ந்த 53 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 48 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாகவும் பிரதமர் நினைவுகூர்ந்தார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11