அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

Share Button

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம், அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அதிகரித்துள்ள தபால்மூல வாக்களிப்பு காரணமாக, மோசடி நடைபெறவும் தவறான முடிவுகள் வரலாம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள், சீராகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் சூழல் உருவாகும்வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ட்ரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரம் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக, அமெரிக்காவில் தபால்மூல வாக்களிப்பை எளிமைப்படுத்தத் திட்டமிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11