தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

Share Button

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

 

தேர்தலுக்கான பிரசார கூட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதோடு அமைதி காலம் ஆரம்பமாகிறது.

எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல்> கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல்> வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல்> துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடைச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்> அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள்> குழுக்கள்> வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11