குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவின் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை

Share Button

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர சர்ச்சைக்குரிய பல குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன தொடர்பான வழக்கில் பொய் சாட்சி கூறி, சாட்சிகளை திரிபுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷானி அபயசேகர கைது செய்யப்பட்டிருந்தார்.

ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை, பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, ரத்துகொஸ்;வல துப்பாக்கிச் சூட்டும் சம்பவம் போன்றவை பற்றிய விசாரணைகள் அவரது மேற்பார்வையில் இடம்பெற்றன.

அதேபோன்று, றோயல் பார்க் படுகொலைச் சம்பவம், அங்குலான இரட்டைப் படுகொலை, உடதலவின்ன படுகொலை முதலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணைகளும் அவரது மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றன.

பொலிசாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷானி அபயசேகர கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில், அவர் பொலிஸ் ஆணைக்குழுவின் விதந்துரைகளுக்கு அமைய கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11