மக்களுக்குச் சேவையாற்ற பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் அமைச்சர் டக்ளஸ்

Share Button

மக்களுக்கு சேவையாற்ற பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 20 ஆசனங்கள் இருந்தால்தான் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதில்லை. குறைந்த ஆசனங்கள் இருந்தாலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என்று அமைச்சர் கூறினார். அவர் இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில் இடம்பெற்ற விடியும் வேளை நிகழ்ச்சி கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.

அரசியல் ரீதியாக தம்மீதுள்ள பயம் காரணமாக, தமக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் கூறினார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் கூறினார். தம்மிடம் தேசிய நல்லிணக்கப் பொறிமுறை உள்ளதாகவும், தமது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றப் போவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11