வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வரும் சகலரதும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Share Button

வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக வாக்குச் சாவடிகளை மையமாகக் கொண்டு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இவற்றைக் கருத்திக்கொண்டு அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கோருவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவித்தலில், வாக்குச் சாவடிககளில் அமுலாக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் விபரித்தார்.

வாக்குச் சாவடிக்கு வரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைக் கழுவிவிட்டு வருவதும் கட்டாயமானது. வாக்குச் சாவடியில் முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் காட்சிய பின்னரும் வாக்காளர்கள் கைகழுவ நிர்ப்பந்திக்கப்படுவார்கள். ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும். வாக்கைச் செலுத்திவிட்டு வெளியேறும்போது கைகழுவுவது அவசியமாகும். இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம் இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11