பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன

Share Button

பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக் காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளையும் இன்று நள்ளிரவு பூர்த்தி செய்ய வேண்டும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார். அவர் எமது நிலையத்திற்கு விபரங்களை அறிவித்தார்.

அதேவேளை, நாட்டின் அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதிக் கூட்டம் இன்று தங்காலையில் நடைபெறும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதிப் பிரசார கூட்டம், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மருதானை டீன்ஸ் வீதியில் இடம்பெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் நடைபெறும். இதற்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்குவார். அனுர குமார திசாநாயக்க தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் இறுதிப் பிரசார கூட்டம் இரவு ஏழு மணிக்கு புதுக்கடை ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் இடம்பெறவுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் ஒழுங்கு செய்ப்;பட்டுள்ளது. இதில் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்குவார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரச்சார கூட்டம்; இன்று மாலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெறும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள வதிரியில் இன்று மாலை இடம்பெறும் என அதன் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று மாலை யாழ்ப்பாணம்; கல்வியங்காடு, அச்சுவேலி, கைதடி பிரதேசங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11